• Breaking News

    சென்னை எழும்பூரில் தமிழ்நாடு தொழில்முனைவோர் மன்றம் சார்பில் 11 சாதனை தொழில்முனைவோருக்கு விருது வழங்கி கவுரவிப்பு


    சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில், தமிழ்நாடு தொழில் முனைவோர் மன்றம் சார்பில் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிகழ்ச்சி மற்றும் சாதனை தொழில்முனைவோருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்சிக்கு தமிழ்நாடு தொழில்முனைவோர் மன்றத்தின் தலைவர் ராமேஷ் பாபு தலைமை தாங்கினார். இதில்  சிறப்பு விருந்தினராக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குனர் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயகம், பேராசிரியர் சுரேஷ் கண்ணன் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமில் ஆலோசகர் பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100க்கு மேற்பட்ட பல இளம் தொழில் முனைவோர்கள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சிறந்த தொழில் முனைவோருராக விளங்கும் 11நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கபட்டது. அதன்படி சிறப்பு விருந்தினர்கள் டாக்டர் செல்வவிநாயகம், பொன்ராஜ், சுரேஷ் கண்ணன் ஆகியோர் 11பேருக்கு சிறந்த தொழில் முனைவோர் காண விருதினை வழங்கினர்.

    தமிழ்நாடு தொழில்முனைவோர் மன்றம் மூலம் இளம் தொழில் முனைவோர்கள் தங்களது பொருட்களை மக்களிடம் சேர்க்கவும் மற்ற தொழில் முனைவோர்களோடு இணைந்து செயல்படவும் வழிவகை செய்கின்றன. மேலும் தொழில்முனைவோராக வரவிரும்பு நபர்களுக்கும் தொழில்முனைவு வழிகாட்டியாகவும் செயல்படுவதாக அதன் தலைவர் ரமேஷ்பாபு தெரிவித்தார்.

    No comments