• Breaking News

    சென்னை ஒ.எம்.ஆர்.படூர் (ஷரத்தா) shraddha Childrens அகடாமி பள்ளி மாணவர்களுக்கு தொழில்முனைவோர் குறித்து பயிற்சி அளிக்கும் வகையில் மாணவர்களே தயாரித்த பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது


    சென்னை ஒ.எம்.ஆர். படூரில் உள்ள ஷரத்தா (shraddha children's academy) குழந்தைகள் அகடாமி சார்பில் இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்களையும் தொழில்முனைவராக்கும் வகையில், பள்ளி மாணவர்களே வீட்டில் தயாரித்த பொருட்களை கண்காட்சி படுத்தி விற்பனை செய்யும் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. தொடர்ந்து 3வது ஆண்டாக நடைபெறும் இந்த கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட அரங்குகளை  மாணவர்கள் அமைத்திருந்தனர்.

    இதில் பிரதனமாக உணவு பொருட்கள் கண்காட்சி அமைந்திருந்தது. மாணவர்கள் சமைத்த பல்வேறு பொருட்களை அவர்களே நேரடியாக விற்பனை செய்தனர். அதேபோல் உணவு பொருட்கள் மட்டுமின்றி அழகுசாதன பொருட்கள்,  கைவினை பொருட்கள், மேக்கப் பொருட்கள், மெகந்தி, விளையாட்டுகள், நடனம், பாடல் என கிராமத்து திருவிழாவை நேரில் காண்பது போல் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

    இந்த கண்காட்சியில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  பார்வையிட்டு மாணவர்களின் தாயாரிப்புகளை வாங்கி மாணவர்களுக்கு ஊக்கமளித்தனர்.இந்த கண்காட்சி மூலம் கிடைக்கும் நிதியை பொருளாதாரத்தில் பின் தங்கிய பள்ளி மாணவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் எனவும் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    No comments