ராமேஸ்வரத்தில் விமான நிலையம்..... அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு - MAKKAL NERAM

Breaking

Friday, March 14, 2025

ராமேஸ்வரத்தில் விமான நிலையம்..... அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

 


சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ராமேஸ்வரத்துக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். ராமேஸ்வரத்துக்கு ரயில் மற்றும் சாலைப்போக்குவரத்து வசதிகள் மட்டுமே உள்ளன. வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள், மதுரை அல்லது துாத்துக்குடி விமான நிலையம் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் செல்ல வேண்டியுள்ளது.

இந்நிலையில், ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டால், ஆன்மிக சுற்றுலா செல்வோருக்கு பேருதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment