கோடநாடு வழக்கு..... மேலும் ஒரு முன்னாள் காவல் அதிகாரியிடம் விசாரணை - MAKKAL NERAM

Breaking

Friday, March 14, 2025

கோடநாடு வழக்கு..... மேலும் ஒரு முன்னாள் காவல் அதிகாரியிடம் விசாரணை

 


கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 11ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான, ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி வீரபெருமாளிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து, மற்றொரு பாதுகாப்பு அதிகாரியான, ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பியான ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த பெருமாளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, கூடுதல் எஸ்.பி பெருமாள் காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். சுமார் மூன்று மணி நேர விசாரணைக்கு பின்னர், அவர் புறப்பட்டுச் சென்றார்.

No comments:

Post a Comment