எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம் - MAKKAL NERAM

Breaking

Tuesday, March 25, 2025

எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்

 


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்கிறார்.
டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பார்வையிட எடப்பாடி பழனிசாமி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் டெல்லியில் முக்கிய தலைவர்களையும் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment