அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் போதை ஒழிப்பு தினம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் போதை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு, அந்தியூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி, அந்தியூர் காவல் உதவி ஆய்வாளர்கள் சந்திரன், மூர்த்தி மற்றும் மகளிர் அமைப்பினர், அந்தியூர் பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விழிப்புணர்வு பேரணி அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு அண்ணாமடுவு, அந்தியூர் பேருந்து நிலையம் வழியாக மீண்டும் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரணி ஊர்வலம் வந்தடைந்தது. இறுதியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் திரளாக பங்கேற்றனர் .
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments