ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில் தென்காசி எம்.பி. டாக்டர் ராணிஸ்ரீகுமார் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த தினத்தையொட்டி கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது. பள்ளி நிர்வாகி அருட்திரு அந்தோனி குரூஸ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் அந்தோணி அருள்பிரதீப் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை சகாயராணி தொகுப்புரை ஆற்றினார். ஆசிரியை சாந்தி சகாய மேரி வரவேற்றார்.
தென்காசி எம்.பி. டாக்டர் ராணிஸ்ரீகுமார், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் கடந்த கல்வி ஆண்டில் என் எம் எம் எஸ்- 35 மாணவர்கள், டிரஸ்ட்- 29 மாணவர்கள், டிடிஎஸ்சி- 2 மாணவர்கள் போன்ற திறனாய்வு தேர்வுகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று வென்றவர்களுக்கும், 10, 11, 12 ஆம் வகுப்புகள் அரசுப் பொது தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கும் எம்.பி. ராணிஸ்ரீகுமார் பரிசு வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில், பள்ளி நிர்வாக அலுவலர் அருள் செல்வராஜ், கீழப்பாவூர் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஜெ.கே.ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் லிகோரி, ஆவுடையானூர் ஊராட்சி தலைவர் மகேஸ்வரி, துணைத் தலைவர் செல்வமேரி, திமுக பொதுக்குழு உறுப்பினர் அருள், திமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் செல்லப்பா, மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளர் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியை சாந்தி, ஜானி, தமிழ் மன்ற ஆசிரியர்கள் மேரி ஆஞ்சலோ, கேத்ரின் கிறிஸ்டிலா, விமலா மேரி, அந்தோணி. என்.சி.சி.அலுவலர் மிக்கேல் அந்தோணி, என்.எஸ்.எஸ். அலுவலர் தங்கதுரை, எஸ்கோட் அலுவலர் ஜஸ்டின், ஜெ.ஆர்.சி. அலுவலர் சகாய ஜோதி, உடற்கல்வி ஆசிரியர்கள் வியாகப்பன், அலெக்ஸ் மற்றும் தமிழ்மன்றத்தினர், ஆசிரியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment