தமிழகத்தில் 2026-ல் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி..... மீண்டும் உறுதிப்படுத்திய அமித்ஷா...... - MAKKAL NERAM

Breaking

Friday, August 22, 2025

தமிழகத்தில் 2026-ல் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி..... மீண்டும் உறுதிப்படுத்திய அமித்ஷா......

 


தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா தொடர்ந்து கூறி வருகிறார். ஏற்கனவே பலமுறை கூட்டணி ஆட்சி என்று அவர் கூறிய நிலையில் அதிமுகவினர் தனித்து தான் ஆட்சி என்கிறார்கள்.


எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மட்டும் தான் தனித்து ஆட்சி அமைக்கும் என்று கூறிவரும் நிலையில் அமித்ஷா தொடர்ந்து கூட்டணி ஆட்சி என்கிறார். இந்நிலையில் இன்று  நடைபெறும் பூத் கமிட்டி மாநாட்டிற்கு உள்துறை மந்திரி அமித்ஷா வருகை புரிந்துள்ளார். அப்போது அவர் தமிழகத்தில் 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறினார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி தனித்து ஆட்சி என்று கூறும் நிலையில் அமித் ஷா மீண்டும் மீண்டும் கூட்டணி ஆட்சி என்று கூறி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


மேலும் தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி 39 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சி அமைக்கப் போகிறது. அதிமுக பாஜக கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல. தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கான கூட்டணி என்றும் கூறினார்‌.

No comments:

Post a Comment