நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடைபெற்ற திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு துவக்க விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் து.செல்வ முத்துக்குமரசாமி தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சுகன்யா பங்கேற்று பயிற்சி வகுப்பை துவங்கி வைத்தார்.
பயிற்சியாளராக புலவர் தி. வேதரெத்தினம்,புலவர் சொக்கப்பன், நடராஜன், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கௌரி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று பயிற்சி அளித்தனர்
பள்ளி மாணவர்கள் மத்தியில் திருக்குறள் தொடர்பான கருத்துக்களை எடுத்துரைக்கும் வகையில் துவங்கப்பட்ட இந்த பயிற்சி வகுப்பு வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மாலை 2 -4 வரை 30 வாரங்கள் சுழற்சி முறையில் அனைத்து மாணவர்களும் பங்குபெறும் வகையில் நடைபெற உள்ளது. திருக்குறளை முழுமையாக படித்து ஒப்புவிக்கு மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது .
இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம், எழுது பொருள், சிற்றுண்டி வழங்கப்பட்டது.
முன்னதாக பயிற்சியார் புலவர் தி. வேதரெத்தினம் வரவேற்றார்.நிறைவாக பள்ளி தமிழாசிரியர் மு. தமிழ்ச்செல்வம் நன்றி கூறினார்.
கீழ்வேளூர் தாலுக்கா நிருபர் த.கண்ணன்
No comments:
Post a Comment