அத்வானியை சந்தித்து வாழ்த்து பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் - MAKKAL NERAM

Breaking

Saturday, August 23, 2025

அத்வானியை சந்தித்து வாழ்த்து பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன்

 


துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த பதவிக்கு அடுத்த மாதம் 9-ந் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி நிறைவு பெற்றது.


இதில் ஆளும் பா.ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிட மனு தாக்கல் செய்து உள்ளனர்.


துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் டெல்லியில் எல். கே.அத்வானியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

No comments:

Post a Comment