ஜம்மு–காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், பயங்கரவாதிகளை ஒழிக்க இந்திய பாதுகாப்பு படைகள் கடந்த 8 நாட்களாக நடத்தி வரும் தீவிர தேடுதல் மற்றும் வளையச்சோதனை நடவடிக்கைகள் இன்று (ஆகஸ்ட் 9) அதிகாலையில் மோதலாக முடிந்தது.
அதிகாலையில் நடந்த கடும் துப்பாக்கிச்சண்டையில், இந்திய ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்ததுடன், 6 பேர் காயமடைந்ததாக தகவல். எல்லை பகுதியில் தொடர்ச்சியாக நிலவும் இந்த பதற்றமான சூழ்நிலை காரணமாக, பாதுகாப்பு படைகள் கூடுதல் படைகளை குவித்து, காட்டுப்பகுதிகளை முற்றுகையிட்டு, ட்ரோன் மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு உபகரணங்களுடன் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றன.
No comments:
Post a Comment