தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கிளாங்காடு ஊராட்சி அங்கன் வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் வருகை, அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என உரிய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஆய்வின் போது அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment