மதுரையில் தவெக மாநாடு திருவிழாபோல மக்கள் அணி திரளும் வகையில் இப்போதிருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வந்து மாநாட்டில் கலந்துகொண்டு வருகின்றனர். மாநாட்டு திடலில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் திரண்டதால், இடம் அளவுக்கு மீறி நெரிசல் ஏற்பட்டு கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட 2 தொண்டர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதனால் மாநாட்டு இடத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. உடனடியாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அங்கிருந்த மருத்துவ குழு விரைந்து செயல்பட்டு அவர்களுக்கு முதற்கட்ட சிகிச்சை வழங்கியது.
தற்போது அவர்கள் இருவரும் மருத்துவ அணியின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். திடலில் வெயிலின் தாக்கம் மற்றும் நெரிசல் காரணமாக பல தொண்டர்கள் உடல்நலக் கோளாறுகளால் அவதியடையும் நிலை உருவாகியுள்ளது. இதை தொடர்ந்து மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment