ரெயில் பயணிகளுக்கு 45 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது..... மத்திய அமைச்சர் தகவல் - MAKKAL NERAM

Breaking

Thursday, August 21, 2025

ரெயில் பயணிகளுக்கு 45 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது..... மத்திய அமைச்சர் தகவல்


நாடாளுமன்றத்தில் எம்.பி. ஒருவர், ரெயில் கட்டணத்தில் பத்திரிகையாளர்களுக்கான சலுகை தொடர்பாக கேள்வி கேட்டிருந்தார். இதற்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.


இந்திய ரெயில்வே, சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் மலிவு விலையில் சேவைகளை வழங்கப்படுவதாகவும், 2023-2024 ம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளில் ரூ.60,466 கோடி மானியத்தை வழங்கியதாகவும் தெரிவித்துள்ள அவர், ரெயில்களில் பயணிக்கும் ஒவ்வொரு நபருக்கும் சராசரியாக 45 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும் “இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சேவையை வழங்குவதற்கான செலவு ரூ.100 என்றால், டிக்கெட்டின் விலை ரூ.55 மட்டுமே. இந்த மானியம் அனைத்து பயணிகளுக்கும் தொடர்கிறது. இந்த மானிய தொகையைத் தாண்டிய சலுகைகள் 4 வகை மாற்றுத்திறனாளிகள், 11 வகை நோயாளிகள் மற்றும் 8 வகை மாணவர்கள் போன்ற பிரிவுகளுக்கு தொடர்கின்றன” என்றும் பதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment