கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிப்பணிகளை மாணவ, மாணவிகளுடன் இணைந்து யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை தொடங்கி வைத்தார்.
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சி, கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் ரூ. 36 லட்சம் மதிப்பீட்டில் புதிய 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி முருகன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல்ராஜ் வரவேற்றார். பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், ஊராட்சி துணைத்தலைவர் செல்வமேரி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment