தமிழக அரசு சார்பில் பொதுமக்களின் வீடு தேடிச் சென்றடையும் வகையில் மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்களான அரிசி, சர்க்கரை, உள்ளிட்ட பொருட்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இதற்கு தாயுமானவர் திட்டம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார்.
அதன்படி முதியோர்-மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேசன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தண்டையார்பேட்டையில் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம்,புது கும்முடிபூண்டியில் உள்ள நியாய விலை கடையில் தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ கோவிந்தராஜன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே ரமேஷ் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அரிசி,சர்க்கரை, உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வழங்கினர்.
கூட்டுறவு துணைச் செயலாளர் சரவணன் கூட்டுறவு செயலாளர் ஞானமூர்த்தி ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு..திமுக மாநில,மாவட்ட நிர்வாகிகள் சி.எச்.சேகர், அன்புவாணன்,உமா மகேஸ்வரி,பகலவன், பா.செ குணசேகரன், ,மீஞ்சூர் சுப்பிரமணி,ஒன்றிய செயலாளர்கள் கி.வே. ஆனந்தகுமார், மு.மணிபாலன், பரிமளம்.,முரளிதரன், ஜான் பொன்னுசாமி, ராஜா,சோழவரம் கி.ஆனந்தகுமார், மஸ்தான். புது கும்மிடிப்பூண்டி திமுக நிர்வாகிகள் மணிகண்டன்லோகேஷ். பிரேம்குமார் முன்னாள் காசு அவர்கள் ஜோதி ஹரிபாபு.. நகர செயலாளர் முத்து மோகன்ராஜ்.உள்ளிட்ட நிர்வாகிகள்,அரசு அதிகாரிகள்,மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment