தென்காசியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 512 மனுக்கள் பெறப்பட்டன.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். ; இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 512 மனுக்கள் பெறப்பட்டது.
முன்னதாக முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனுடைய முன்னாள் படைவீரருக்கு இணைப்புச்சங்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரையும், தாட்கோ அலுவலகத்தின் மூலம் கீழ் உழவன்குழு, காளியம்மன் குழு, மருதமலர் குழு ஆகிய மூன்று மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.17,50,000 மதிப்பிலான மானியத்தில் கடனுதவித்தொகையினையும் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ராஜ்குமார், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment