புதுக்கோட்டை: இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதி விபத்து...... கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலி...... - MAKKAL NERAM

Breaking

Monday, August 25, 2025

புதுக்கோட்டை: இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதி விபத்து...... கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலி......


 புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே புண்ணியவயல் கிராமத்தில் மணல் ஏற்றி வந்த டிராக்டர் மோதி கல்லூரி மாணவர் இறந்தார்.


ஆவுடையார் கோவில் அருகே அமரடக்கி அருகிலுள்ள கண்ணெரியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மதி இவருடைய மகன் சுதர்சன் ( 19 ) இவர் ஆவுடையார் கோவில் அருகில் உள்ள பெருநாவலூர் அரசு கலைக்கல்லூரியில் பி ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.


 இந்நிலையில் இவர் கல்லூரி முடிந்து இருசக்கர வாகனத்தில் தன் வீட்டுக்கு சென்றபோது புண்ணிய வயல் அருகில் கமலக்குடி பகுதியில் இருந்து இருபாட்டு மண் ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் வந்தது கல்லூரி மாணவர் புண்ணியவயல் அருகே சென்றபோது டிராக்டர் மோதி பலத்த காயம் அடைந்தார் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.டிராக்டரை ஒட்டி வந்த சிறுவரை கிராமத்தை சேர்ந்த முருகேசன் (38)என்பவரிடம் ஆவுடையார் கோவில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


சென்ற இரு தினங்களுக்கு முன்னர் தான் இதே கல்லூரியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு படிக்கக்கூடிய கல்லூரி மாணவர் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் மீண்டும் ஒரு மாணவர் அதேபோல சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளது இப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 


கல்லூரிகளில் மாணவர்கள் வாகனங்களில் செல்கின்ற பொழுது கடைபிடிக்க வேண்டிய போக்குவரத்து விதிமுறைகளையும் வாகனம் வைத்திருக்கும் மாணவர்கள் அனைவரும் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்றும் இதுகுறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment