அஜித் குமார் கொலை வழக்கு...... 5 தனிப்படை போலீசாருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு...... - MAKKAL NERAM

Breaking

Tuesday, August 26, 2025

அஜித் குமார் கொலை வழக்கு...... 5 தனிப்படை போலீசாருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு......

 


சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி வந்த பேராசிரியை நிகிதா, தனது காரில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, அந்தக் கோவில் காவலாளி அஜித்குமாரை தனிப் படை போலீசார் 5 பேர் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.


இதுதொடர்பான வழக்கில் தனிப் படை போலீசாரர்களான கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், சிறையில் உள்ள தனிப்படை போலீசார் 5 பேருக்கு 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment