சுரண்டை பகுதியில் ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட 7 விநாயகர் சிலைகள் அகற்றம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, August 27, 2025

சுரண்டை பகுதியில் ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட 7 விநாயகர் சிலைகள் அகற்றம்

 


சுரண்டை பகுதியில்  ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட 7 விநாயகர் சிலைகளை காவல்துறையினர் அகற்றினர்.

தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் பிரச்சனைக்குரிய பகுதிகளில் கொடி அணிவகுப்பு மேற்கொள்ளுதல், மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை பொறுப்பாளர்களை அழைத்து தகுந்த அறிவுரைகள் வழங்குதல், மேலும் 24 மணி நேரமும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களை ரோந்து பணியில் ஈடுபட்டு தொடர்ந்து கண்காணிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி மறுக்கப்பட்ட ரசாயண பொருட்களால்  தயாரிக்கப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிந்தும் சுரண்டை, வரகுண ராமபுரம், கீழச்சுரண்டை, அச்சங்குட்டம், பூ பாண்டியாபுரம் , லஷ்மிபுரம் ஆகிய பகுதிகளில் கரைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த 7 சிலைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.


மேலும் இது போன்ற அனுமதி மறுக்கப்பட்ட செயல்களில் ஈடுபட்டால் துறை சார்ந்த அதிகாரியால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment