தென்காசியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 193 மனுக்கள் பெறப்பட்டன.தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். சார் ஆட்சியர் வைஷ்ணவி பால் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு நடமாடும் காய்கறி வண்டிகளை ரூ. 1,35,000 மதிப்பில், மானியத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 193 மனுக்களுக்கு 10 நாட்களுக்குள் விரிவான மற்றும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலை வழங்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநர் அமலா, வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கனகம்மாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.இரா.தண்டாயுதபாணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நரசிம்மன், தோட்டக்கலை துணை இயக்குநர் ஜெசிமா பானு, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம்) வசந்தி, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எடிசன் மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், அனைத்து துறை அலுவலர்கள், அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாய பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment