நாகல்குளத்தில் ரூ.9 லட்சத்தில் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைப்பணியினை யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை தொடஙகி வைத்தார்.
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், நாகல்குளம் ராஜா தெரு ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ராதாகுமாரிமாரிமுத்து, மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், திமுக கிளை செயலாளர் காசிபாண்டி. மணி, ராஜசேகர், தங்கராஜா, மாதவன், சுடலைகண்ணு, மாரி,ஒப்பந்ததாரர் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாரிமுத்து நன்றி கூறினார்.
No comments:
Post a Comment