திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அங்குள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.இதில் அத்திப்பட்டு ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயர் திருத்தம், ஆதார் கார்டு புதுப்பித்தல், வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கான மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கினர்.
பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல், துணைத் தலைவர் எம்.டி.ஜி,கதிர்வேல், ஆகியோர் தலைமையில் வடசென்னை அனல் மின் நிலையம் அமைப்பதற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இதுவரையிலும் பட்டா வழங்கவில்லை உடனடியாக அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடத்தில் உள்ள அரசு மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் கலந்து கொண்டு கருவுற்ற பெண்களுக்கு சத்துணவு பெட்டகத்தை வழங்கினார் பின்னர் உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுதாரர்களுக்கு சான்றுகளை வழங்கினார் நிகழ்ச்சியில் அத்திப்பட்டு ஊராட்சி செயலர் ஆனந்தன், வல்லூர் பா.து. தமிழரசன், உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment