தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு இடையூறு.? அமைச்சர் மூர்த்தியின் பதில் - MAKKAL NERAM

Breaking

Friday, August 22, 2025

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு இடையூறு.? அமைச்சர் மூர்த்தியின் பதில்


 2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. இந்த சூழலில் 2-வது மாநில மாநாடு நேற்று மதுரையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


அந்த மாநாட்டில் பேசிய ஆதவ் அர்ஜுனா,, தவெக மாநாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி பல்வேறு தடைகளை ஏற்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில், இது தொடர்பாக அமைச்சர் மூர்த்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-


நேற்று காலையில் தொடங்கி மாலை வரை என்னுடையே தொகுதியை சாந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. எதிரிக்கு கூட நாங்களோ அல்லது எங்கள் முதல்-அமைச்சரோ அந்த மாதிரி வேலைகளை நாங்கள் எந்த காலத்திலும் பார்ப்பதில்லை. அவர் செய்திருக்கிறார் என்றால் அதைவிட ஒரு பங்கு மேலாக செய்ய தான் நாங்கள் நினைப்போம். இந்த சில்லித்தனமான வேலைகளை எல்லாம் திமுக எந்த காலத்திலும் செய்யாது. சேர் கொடுக்கக்கூடாது போன்றவற்றை திராவிட முன்னேற்ற கழகத்தில் இருக்கக்கூடிய ஒரு தொண்டன் கூட அதனை செய்ய மாட்டார். இது உண்மைக்கு மாறான செய்தி என கூறினார்.

No comments:

Post a Comment