நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி இன்று கடற்கரை சாலை முதல் முக்கிய வீதி வழியாக வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தை வந்து அடைந்தது, விழிப்புணர்வு பேரணிக்கு முன்பாக போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
புனித ஆரோக்கிய மாதா கலைக்கல்லூரியின் மாணவ மாணவிகள் சுமார் 500க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர், இந்நிகழ்வில் பேரூராட்சி தலைவர் ஏ.டயானா சர்மிளாபேரூராட்சி துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் செயல் அலுவலர் எம்.பொன்னுசாமி கலைக்கல்லூரி செயலாளர் அருள் திரு.ஆதி ஆரோக்கியசாமி, புனித ஆரோக்கிய மாதா கலைக்கல்லூரி முதல்வர் எஸ்.பிரின்ஸ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.மோகன், பேரூராட்சி துப்புரவு அலுவலர் சுப்பிரமணியன், வேளாங்கண்ணி காவல் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாகை மாவட்ட நிருபர் ஜீ. சக்கரவர்த்தி
No comments:
Post a Comment