குத்துக்கல்வலசையில் வாறுகால் அமைக்கும் பணியினை ஊராட்சி மன்ற தலைவர் சத்தியராஜ் தொடங்கி வைத்தார்.
தென்காசி ஊராட்சி ஒன்றியம், குத்துக்கல்வலசை ஊராட்சி சுப்பிரமணியபுரத்தில் அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.16.75 இலட்சம் செலவில் புதிய வாறுகால் அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. இப்பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத்தலைவர் சண்முகசுந்தரம், வார்டு உறுப்பினர் அம்புலி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment