காசா மீது இஸ்ரேல் தாக்குதல்..... புகழ்பெற்ற கால்பந்து வீரர் உயிரிழப்பு..... - MAKKAL NERAM

Breaking

Sunday, August 10, 2025

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்..... புகழ்பெற்ற கால்பந்து வீரர் உயிரிழப்பு.....

 


காசா: “பாலஸ்தீன பீலே” என போற்றப்பட்ட முன்னாள் பாலஸ்தீன தேசிய கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் சுலைமான் அல்-ஒபெய்ட் (41), தெற்கு காசா பகுதியில் மனிதாபிமான உணவு உதவிக்காகக் காத்திருந்த பொதுமக்களை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.


காசா நகரில் பிறந்த அவர், பாலஸ்தீன அணிக்காக 24 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 100-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்து கால்பந்து வரலாற்றில் இடம்பிடித்திருந்தார். கதாமத் அல்-ஷாதி மற்றும் அல்-அமாரி யூத் சென்டர் கிளப்புகளுக்காக விளையாடிய அவர், 2010-ஆம் ஆண்டு பாதுகாப்பு காரணங்களால் ஜோர்டானிய எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஆறு காசா வீரர்களில் ஒருவராகவும் இருந்தார்.

No comments:

Post a Comment