தென்காசியில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா...... மாவட்ட ஆட்சியர் - மாவட்ட நீதிபதி பங்கேற்பு..... - MAKKAL NERAM

Breaking

Sunday, August 10, 2025

தென்காசியில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா...... மாவட்ட ஆட்சியர் - மாவட்ட நீதிபதி பங்கேற்பு.....


தென்காசி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர், மாவட்ட நீதிபதி ராஜவேலு கலந்து கொண்டனர்.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா நடைபெற்றது. தென்காசி மாவட்ட  சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் பிரேமலதா தலைமை வகித்தார். மருத்துவ மனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் வரவேற்றார். குழந்தைகள் தலைமை மருத்துவர் கீதா கிருஷ்ணன் விளக்கி பேசினார்.

சிறப்பு விருந்தினர்களாக தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பி.ராஜவேலு ஆகியோர் பங்கேற்று பேசினர். இந்த நிகழ்ச்சியில்  தென்காசி மாவட்ட குழந்தைகள் சங்க தலைவர் மீரான் மருத்துவமனை மருத்துவர் அப்துல் அஜீஸ், மருத்துவ மனை உறைவிட மருத்துவர்  செல்வபாலா, மருத்துவர் தமிழருவி, மருத்துவர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தாய்பால் வார விழாவில் வெற்றி பெற்ற தாய்மார்கள் , பயிற்சி செவிலியர் மற்றும் மருத்துவ மனை ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் கீதா கிருஷ்ணன், மருத்துவர் ஜெஸ்லின், மருத்துவர் அப்துல் அஜீஸ்,  உமா மகேஷ்வரி, புனிதவதி ,மருத்துவர் பாபு,மருத்துவர் சங்கரி ஆகியோர் செய்து இருந்தனர். முடிவில் மருத்துவர் பாபு  நன்றி கூறினார்.

No comments:

Post a Comment