பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி. கனிமொழி சந்திப்பு - MAKKAL NERAM

Breaking

Friday, August 8, 2025

பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி. கனிமொழி சந்திப்பு

 


பிரதமர் மோடியை திமுக எம்.பி. கனிமொழி இன்று டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழகம் மற்றும் தூத்துக்குடி தொகுதியில் உள்ள மக்கள் பிரச்சினைகளை தீர்க்க பிரதமர் மோடியிடம், கனிமொழி எம்.பி. வலியுறுத்தினார். தூத்துக்குடி துறைமுகத்தில் நிலவி வரும் பிரச்சினைகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தார்.


அதேவேளை, தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ. 452 கோடி செலவில் புதிய விமான முனையம் அமைப்பதற்கு உறுதுணையாக இருந்தத்தற்காக பிரதமர் மோடிக்கு கனிமொழி எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் 26ம் தேதி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment