அரியப்பபுரம் ஊராட்சியில் ரேசன் பொருட்களை வீடு, வீடாக வழங்கும் தாயுமானவர் திட்டத்தினை ஓன்றிய திமுக பொறுப்பாளர் ரமேஷ் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு.வீடாக சென்று ரேசன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதையொட்டி கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், அரியப்பபுரம் ஊராட்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கீழப்பாவூர் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஜெ.கெ.ரமேஷ் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணை செயலாளர் செல்லப்பா, ஒன்றிய கவுன்சிலர் வளன்ராஜா, ஊராட்சி தலைவர் தினேஷ்குமார், நிர்வாகிகள் செந்தூர் முருகன், பிரம்மநாயகம், பூதத்தான், சந்திரசேகர், சரவணன், தங்கராஜ், சொட்டு சுப்பிரமணியன், ரூபன் ஜெயக்குமார், சத்தியராஜ், ரவிகுமார், குத்தாலிங்கம், கதிரவன், வெள்ளத்துரை, ராஜசுதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment