பாவூர்சத்திரத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் திறந்து வைத்து பேவர் பிளாக் சாலை - MAKKAL NERAM

Breaking

Wednesday, August 13, 2025

பாவூர்சத்திரத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் திறந்து வைத்து பேவர் பிளாக் சாலை


பாவூர்சத்திரத்தில் அமைக்கப்பட்ட புதிய பேவர் பிளாக் சாலையை  பள்ளி மாணவ, மாணவிகள் திறந்து வைத்தனர்.


கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், கல்லூரணி ஊராட்சி, பாவூர்சத்திரம் பள்ளிக்கூட தெருவில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் நிதி மற்றும் கல்லூரணி ஊராட்சி மன்ற நிதியில் இருந்து அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை திறப்பு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் சாக்ரடீஸ் வரவேற்று பேசினார். பள்ளி முன்பு அமைக்கப்பட்ட இச்சாலையை, அப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் திறந்து வைத்தனர்.


இந்நிகழ்ச்சியில், மக்கள் நல மன்ற தலைவர் கோபு ஆசிரியர், வார்டு உறுப்பினர் பொட்டுத்தாய், அறங்காவலர் குழு உறுப்பினர் காலசாமி, பொன்னையாநாடார், தங்கபாண்டியன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ஜான்சி நன்றி கூறினார்.


பள்ளி மாணவ, மாணவிகளை வைத்து சாலையை திறக்க வைத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment