பச்சேரி கிராமத்தில் ஒண்டிவீரன் நினைவுத்தையொட்டி திமுக சார்பில் மாவட்ட துணை செயலாளர் கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 254வது நினைவு தினம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நெல்கட்டும் செவல் பச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள ஒண்டிவீரனின் நினைவிடத்தில் உள்ள நினைவு தூணிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமுதாய நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான வழக்கறிஞர் கனிமொழி திமுக சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர் ஒன்றிய திமுக பொறுப்பாளர் மணிகண்டன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment