போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மற்றும் இந்திய தொழிற்சங்க மையம் சார்பில், நாகப்பட்டினம் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு இன்று மூன்றாவது நாளாக மத்திய சங்கத் தலைவர் ஏ.கோவிந்தராஜ் தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. துணைப் பொதுச்செயலாளர்கள் எம்.மோகன், கே.ராமமூர்த்தி, ஆர்.திருச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி துவக்கிவைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, சம்மேளன துணைத் தலைவர் எம்.கண்ணன், மண்டல பொதுச்செயலாளர் எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்திய தொழிற்சங்க மைய மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.இராஜேந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர்கள் ப.அந்துவன்சேரல், அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட், த.ஸ்ரீதர், ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கத் தலைவர் வி.பாலசுப்பிரமணியன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
தேர்தல் வாக்குறுதிப்படி அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், 25 மாதங்களாக வழங்கவேண்டிய ஓய்வூதியர்களின் நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும், ஏழாவது ஊதியக்குழு அடிப்படையில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி.
No comments:
Post a Comment