ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி - MAKKAL NERAM

Breaking

Friday, August 8, 2025

ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி

 


ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசி வழியாகப் பேசியுள்ளார். ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்து வரும் டிரம்ப், இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளார்.


இத்தகைய சூழலில், ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேசியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.இந்த உரையாடலின்போது, அமெரிக்காவின் வரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசியிருக்கலாம் எனத் தெரிகிறது. அதுமட்டுமின்றி, இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும், உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும் புதின் - மோடி ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.


இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: "இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசித்தோம். எனது நண்பர் புதினுடன் நல்லதொரு விரிவான உரையாடலை நிகழ்த்தினேன். உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களைப் பகிர்ந்துகொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆண்டு பிற்பகுதியில் அதிபர் புதினை இந்தியாவில் வரவேற்க ஆவலாக உள்ளேன்," என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment