இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ளது. ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா கைவிடாதத்தால் இந்த வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் இந்த நடவடிக்கையால் இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, இம்மாத இறுதியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அமெரிக்கா செல்ல திட்டமிடிருந்தார். இந்த பயணத்தின்போது பாதுகாப்புத்துறை தொடர்பாக அமெரிக்க, இந்தியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் அமெரிக்க பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் ராஜ்நாத் சிங்கின் அமெரிக்க பயணம் ரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment