காரில் ஏற்ற மறுத்த எடப்பாடி பழனிச்சாமி..... செல்லூர் ராஜூ கொடுத்த விளக்கம்...... - MAKKAL NERAM

Breaking

Friday, August 8, 2025

காரில் ஏற்ற மறுத்த எடப்பாடி பழனிச்சாமி..... செல்லூர் ராஜூ கொடுத்த விளக்கம்......

 


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் காரில் ஏற முயன்ற செல்லூர் ராஜுவை வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.அதாவது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருகே நடைபெற்ற கூட்டம் முடிவடைந்த பிறகு செல்லூர் ராஜு எடப்பாடி பழனிச்சாமியின் வாகனத்தில் ஏற முயன்றார். அப்போது அவரை தடுத்த எடப்பாடி பழனிச்சாமி பின்வரும் காரில் ஏற அறிவுறுத்தினார்.


உடனே செல்லூர் ராஜூவும் வேறு காரில் ஏறி பயணித்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பலரும் செல்லூர் ராஜு மீது எடப்பாடி பழனிச்சாமி அதிருப்தியில் இருப்பதாக கூறி வருகின்றனர்.


ஆனால் அது குறித்து பேசிய செல்லூர் ராஜு கூறியதாவது, “எடப்பாடி பழனிச்சாமிக்கு என் மீது எந்த ஒரு அதிருப்தியும் கிடையாது. அந்தக் காரில் இடம் இல்லாத காரணத்தினால் வேறு காரில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை அவ்வளவுதான்”என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

No comments:

Post a Comment