சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நாளை மாமல்லபுரத்தில் நடத்த உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு எந்தத் தடையும் இல்லை என்று உத்தரவிட்டுள்ளார்.
பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கு முன்னர், நீதிபதி நேரடியாக ராமதாஸ் மற்றும் அன்புமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இரு தரப்பினரின் வழக்கறிஞர்களின் வாதங்களையும் கேட்டார். இதையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து, கூட்டம் நடைபெறுவதற்கு அனுமதி வழங்கினார்.
No comments:
Post a Comment