முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 7-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு இன்று காலை மாலை அணிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, கட்சிப் பொருளாளர் டி.ஆர். பாலு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர். இறுதியாக, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
No comments:
Post a Comment