வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் அரசு பொது விடுமுறையாக இருப்பினும், அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பொன்னையா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் தூய்மையான குடிநீர் வழங்கல், குடியிருப்பு பகுதியில் நடைமுறையில் உள்ள பிரச்சனைகள், கிராம வரவு செலவுக் கணக்குகள் உள்ளிட்டவை குறித்து மக்கள் நேரில் பங்கேற்று விவாதிக்க வேண்டுமெனவும், மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து தீர்வுகள் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மக்களை ஊக்குவிக்கும் வகையில் கிராம சபைக் கூட்டங்களில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் ஊரின் பிரச்சனைகளை நேரடியாக முன்வைத்து தீர்வு காண வேண்டும் என அரசு கேட்டுள்ளது.
No comments:
Post a Comment