நாகை: ஊராட்சி செயலரை கண்டித்து கோட்டூர் ஊராட்சி மன்றம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் - MAKKAL NERAM

Breaking

Monday, August 11, 2025

நாகை: ஊராட்சி செயலரை கண்டித்து கோட்டூர் ஊராட்சி மன்றம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

 


நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றிம் வடகரை - ஏனாநல்லூர், கோட்டூர் ஊராட்சி செயலாளர் S. சசிகுமார் அவர்களின் ஊழல் முறை கேடு, பெண் ஊழியரிடம் தகாத வார்த்தை பயன்படுத்தி பேசுவது, 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊதியத்தை முழுமையாக வழங்காமல் காலம் தாழ்த்துவது போன்றவற்றை கண்டித்தும், ஊராட்சி செயலாளரை பணிநீக்கம் செய்வது, ஊராட்சியை குப்பைகளற்ற ஊராட்சியாக பராமரிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருமருகல் ஒன்றியக்குழு சார்பில் முற்றுகை போராட்டம் ஏனாநல்லூர், கோட்டூர்  ஊராட்சி அலுவலகம் முன்பாக   நடைபெற்றது.


ஒன்றிய செயலாளர் PM வெனின் தலைமைதாங்கினார். மாவட்டச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  வி.மாரிமுத்து சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் மற்றும் CITU மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.ராஜேந்திரன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கோரிக்கைகளை இரண்டு வாரங்களில் சரி செய்வதாக திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறை ஆய்வாளர்  வாக்குறுதி அளித்தார்கள். அதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது .

No comments:

Post a Comment