இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பதவி வகித்தவர் எரிக் கார்செட்டி. கடந்த 2023-ம் ஆண்டு மே முதல் 2025-ம் ஆண்டு ஜனவரி வரை இந்த பதவியில் அவர் நீடித்த நிலையில், அந்த பதவிக்கு புதிதாக ஒருவரை டிரம்ப் நியமித்து உள்ளார்.
இதன்படி, செர்ஜியோ கோர் என்பவரை ஜனாதிபதி டிரம்ப் இன்று நியமித்து உத்தரவிட்டு உள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஜனாதிபதி அதிகாரிகளுக்கான அலுவலகத்தின் இயக்குநராக அவர் பணியாற்றி வருகிறார்.
டிரம்பின் நீண்டகால உதவியாளரும் ஆவார். இந்த அறிவிப்பு பற்றி டிரம்ப் வெளியிட்டு உள்ள செய்தியில், பல ஆண்டுகளாக என்னுடன் இருந்த, என்னுடைய சிறந்த நண்பன் கோர்.
இந்திய குடியரசுக்கான நம்முடைய அடுத்த அமெரிக்க தூதராக அவருக்கு பதவி உயர்வு அளிக்கிறேன் என அறிவித்து உள்ளார். அவர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்பு தூதராகவும் பணியாற்றுவார் என்றும் டிரம்ப் கூறினார்.
எனினும், செனட் ஒப்புதல் அளிக்கும் வரை வெள்ளை மாளிகையில் தற்போது வகித்து வரும் பதவியிலேயே அவர் நீடிப்பார் எனவும் டிரம்ப் கூறினார்.
No comments:
Post a Comment