சென்னை கண்ணகி நகரில் அதிகாலை தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த வரலட்சுமி என்ற பெண் பணியாளர், தேங்கி நின்ற மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், துரைப்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 19 செ.மீ. மழை பதிவானது. இதன் அருகிலுள்ள கண்ணகி நகரில் இந்த துயரமான விபத்து நடந்தது அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், மின்வாரியத்தின் சார்பில் ரூ.10 லட்சமும், தனியார் தூய்மைப்பணி ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் ரூ.10 லட்சமும் வழங்கப்பட உள்ளது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment