![]() |
கிராம நிருவாக அலுவலர்களின் வாழ்வாதாரா கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாநிலம் முழுவதும் கிராம நிருவாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநில தகவல் தொடர்பு செயலாளர் தினேஷ் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிராம நிருவாக அலுவலர் பணிக்கான கல்வி தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும், 10 மற்றும் 20 ஆண்டுகள் பணி முடித்த அலுவலர்களுக்கு தேர்வு நிலை மற்று சிறப்பு நிலை கிராம நிருவாக அலுவலர்கள் என பெயர் மாற்றி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் TSLR பட்டா மாறுதலில் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துறைய நடைமுறை படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதே போன்று நாகை , திருக்குவளை, வேதராண்யம் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாகவும் மாவட்டத்திற்கு உட்பட்ட 219 கிராம நிருவாக அலுவலர்களும் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
No comments:
Post a Comment