மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும் முன்னாள் குத்தாலம் சட்டமன்ற உறுப்பினருமான பி.கல்யாணம் தலைமையில் குத்தாலம் தேரடி பகுதியில் இருந்து கலைஞரின் திருவுருவப்படத்துடன் அமைதி பேரணியாக வந்து குத்தாலம் கடை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்த மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
உடன் குத்தாலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன்,வடக்கு ஒன்றிய செயலாளர் குமரா வைத்தியநாதன்,முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன்,பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன்,பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment