விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஏராளமானவர்கள் தனியார் பேருந்துகளை நாடுகிறார்கள். இதனை பயன்படுத்திக் கொண்ட சில பேருந்து நிறுவனங்கள், அச்சமூட்டும் அளவிற்கு டிக்கெட் கட்டணங்களை உயர்த்தி உள்ளன. குறிப்பாக,ஆம்னி பேருந்துகளில் ₹800 ஆக இருந்த கட்டணம் தற்போது ₹2000 வரை வசூலிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இருக்கையில் பயணிக்க அதிகபட்சமாக ₹1320- ம், படுத்துக்கொண்டு பயணிக்க ₹4000 வரை கட்டணம் உயர்ந்துள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னை முதல் திருச்சிக்கு ₹2500 வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மக்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அதிகாரிகள் இந்த கட்டண மோசடிக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.
No comments:
Post a Comment