டெல்லியில் கடந்த 2018-19ம் ஆண்டில் அரசு 24 மருத்துமனைகளை கட்டுவதற்கு ரூ.5590 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. ஐசியுக்கள் உட்பட இந்த மருத்துவமனைகள் ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 3 ஆண்டுகளை கடந்தும் இந்த திட்டம் முடிக்கப்படாமல் உள்ளன.
இந்த திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்தன.இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திட்டம் ஒப்புதல் அளிக்கும் போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த, ஆம்ஆத்மி கட்சி தலைவர் சவுரவ் பரத்வாஜின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சந்தேயந்தர் ஜெயினுக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடக்கிறது. டில்லி 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment