நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி - MAKKAL NERAM

Breaking

Friday, August 8, 2025

நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி

 


நாகாலாந்து மாநில ஆளுநராகப் இல.கணேசன் (வயது 80) பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநராகவும் பணியாற்றி உள்ளார்.


பாஜகவில் மாநில தலைவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இல கணேசன், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.


இந்தநிலையில், இல.கணேசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment