நாகப்பட்டினம் மாவட்டம் கொளப்பாடு கடைத்தெரு மெயின் ரோட்டில் உள்ள தர்மராஜன் பழைய இரும்பு கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மேலும் தீ மளமளவென அருகிலுள்ள கீத்துக்கொட்டகை மற்றும் வைக்கோல் போரில் பற்றி எரிய துவங்கியது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் நீரை ஊற்றி தீயை அணைக்கும் முற்பட்டும் கட்டுக்கடங்காமல் தீ வான் உயர எரிந்து கரும்புகை மூட்டத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தலைஞாயிறு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் நீரை பீய்ச்சு அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கடையில் உள்ள பொருட்கள் முற்றிலும் தீயில் எறிந்து நாசமான நிலையில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை. இதனால் பகுதியில் சிறிய நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து வலிவலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கீழ்வேளூர் தாலுகா நிருபர் த.கண்ணன்
No comments:
Post a Comment