அறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் கலைத்திறன்போட்டிகள் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Monday, August 25, 2025

அறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் கலைத்திறன்போட்டிகள் நடைபெற்றது

 


புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் 26 ஆவது ஆண்டுத் தொடக்க விழாவின் நிறைவு நாள் கலைத்திறன்போட்டிகள் அறந்தாங்கி டி.என்.எஸ்.தேவர் திருமண மண்டபத்தில்   நடைபெற்றது. 

அறக்கட்டளையின் தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னதாகத் தமிழக கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் மாண்புமிகு.எஸ்.ரகுபதி அவர்கள், தலைமை சிறப்பு விருந்தினராக வருகை தந்து,  போட்டிகளைத்தொடங்கி வைத்து, சிறப்புரை ஆற்றினார்.  பேச்சுப்போட்டிகள், மாறுவேடப்போட்டி, நடனப்போட்டிகள், தங்கத்தம்பதியர் போட்டி என நடந்த போட்டிகளில் 40க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச்சேர்ந்த 2000க்கும்  மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். 

ஏகப்பெருமாளூர் அரசுப்பள்ளிக்கு கம்ப்யூட்டரும், இடையங்காடு பள்ளிக்கு ஆர்ஓ சிஸ்டமும், வைரிவயல் பள்ளிக்கணினி ஆய்வகத்திற்கு ஏசியும், அறந்தாங்கி அரசு மாதிரி மேனிலைப்பள்ளிக்கு 5 மின்விசிறிகளும், அரசு கல்லூரிக்கு எல்இடி டிவியும், அஞ்சலி என்ற பெண்ணுக்கு தையல் எந்திரமும் வழங்கப்பெற்றன. 

கலைத்திறன் போட்டிகளில் அதிக வெற்றிப்புள்ளிகளைக்குவித்து, புதுக்கோட்டை மெளண்ட் சீயோன் பள்ளி,  இந்த ஆண்டுக்கான கே.பி.கல்சுரல் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. அறக்கட்டளைச்செயலாளர் எம்.ஜி.ராஜா, பொருளாளர் சு.விஸ்வமூர்த்தி,  இணைச்செயலாளர் ப.கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் எம்.ஜி.சேகர், சு.பெ.பார்த்திபராஜாகே.பரக்கத்துல்லா,எம்.ஜி.வினோத்குமார்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் திரைப்பட நடிகர் கலைமாமணி போஸ் வெங்கட்,  விஜய் டிவி புகழ் அறந்தை நிஷா,மகாகுரு கழுகுமனை செ.சந்திரசேகரன்,ஆன்மீகச்செம்மல் பி.வி.இரவிக்குமார், அறந்தாங்கி நகர்மன்றத்தலைவர் இரா. ஆனந்த்,சிட்டங்காடு ரஞ்சன்,  நகர்மன்றத்துணைத்தலைவர் தி.முத்து,புதுக்கோட்டை எஸ்.ஆர் அறக்கட்டளைத்தலைவர் பாலசண்முகம், நெற்குப்பம் சி.அகிலன்கார்த்திகேயன், புதுக்கோட்டை சமூக சேவகர் பி.கே.வைரமுத்துகுமாரசாமி, புதுக்கோட்டை முத்துப்பிள்ளை கேண்டீன் கர்ணன்,ஆடிட்டர் கோபி,கோவைத்தொழிலதிபர்கள் செல்வக்குமார்,உதயக்குமார்,நவநீதன், சந்தோஷ், சென்னை வைரமணி,தினகர்,ராம்ஸ்,ஹரி உள்ளிட்ட முக்கியப்பிரமுகர்கள்,மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்று,போட்டிகளில் வெற்றிபெற்ற  மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும்,சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினர்.

இப்போட்டிகள் நடைபெற்ற மூன்று நாட்களும் வருகை தந்த மாணவ, மாணவியர், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பத்தாயிரம் பேருக்கு மதிய உணவு சிறப்பாக வழங்கப்பெற்றது. முன்னதாகத் துணைச்செயலாளர் சி.காசிநாதன்  அனைவரையும் வரவேற்றார்.நிறைவாக மக்கள் தொடர்பு அலுவலர் மு.பழனித்துரை  நன்றி கூறினார்.  

விழா ஏற்பாடுகளை, அறக்கட்டளைச்செயற்குழு உறுப்பினர்கள் ஜெ.ரஜினி, தனலெட்சுமி சரவணன் ,த. மனோகர், எம்.ஜி.கிஷோர்குமார், ரா.மாணிக்கம், எஸ்.சக்திகுமரன் கே.ஆர்.வெங்கடேசன்,இளம் உறுப்பினர்கள்   ரா.ஹர்ஷவரதன்,சு.கிரண், கா.சங்கீத்குமார்,கே.ஆர்.ராஜேஷ் ,ஐ.ஸ்ரீராம்,, கா.விஸ்வா , சு.வி.ஹரிபிரசாத்,போ பரத்,சு.வி.சுபாஷ்சந்திரன், ரா.சரிணிதா,பா.ஹரி, ப.பேரெழில்,ப.ஆக்கிபா,ப.சேணவி,வி.சிவானி, கிருஷ்ணா உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment