நாகை அருகே மீனம்பநல்லூரில் விவசாயிகள் வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டம் - MAKKAL NERAM

Breaking

Monday, August 25, 2025

நாகை அருகே மீனம்பநல்லூரில் விவசாயிகள் வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டம்


பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் சம்பா சாகுபடி செய்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு கடந்த (2024) வருடம் 179 கோடி ரூபாய் தமிழக அரசு நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டது. தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிப்படைந்த விவசாயிகள் இந்த நிவாரணம் கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருந்தனர்.

ஆனால் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையில் முதற்கட்டமாக 91 கோடி ரூபாய் நிதியை விடுவித்து விவசாயிகளுக்கு வழங்க வேளாண்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.  ஆனால் நெல் கொள்முதல் செய்த விவசாயிகள் மற்றும் புல எண் பதிவான விவசாயிகளுக்கு  நிவாரணம் வழங்கப்படாது என வேளாண்துறை அதிகாரிகள் அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அடுத்த மீனம்பநல்லூர் கிராமத்தில் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் விவசாயிகள்  வயலில் இறங்கிய விவசாயிகள் கருப்புக்கொடிகளை காட்டி கோஷங்களை எழுப்பினர். 

அப்போது இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டுமெனவும், அனைத்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகைகளை வழங்க வேண்டியும் கோஷங்களை எழுப்பினர். வேளாண் இயக்குநர் முருகேசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் முழக்கங்களை எழுப்பிய விவசாயிகள் அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரண தொகையை விடுவிக்கவில்லையென்றால் சென்னை வேளாண்மைத்துறை அலுவலகம் முற்றுகையிடப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். 

ஆர்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ஆர்.பி. பாலசுப்ரமணியன்,மாவட்ட பொறுப்பாளர்  ஆர்.எஸ். கருணைநாதன், மாவட்ட பொருளாளர்  ஜி. சபாநாதன், கீழையூர் ஒன்றிய செயலாளர் பாலக்குறிச்சி அருணகிரி,கிளை செயலாளர் கே.வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

கீழ்வேளூர் நிருபர் த.கண்ணன் 


No comments:

Post a Comment